காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு அளித்துள்ள 5 உத்தரவாதங்கள்!

 
congress

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு 5 உத்தரவாதங்களை அளித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் அனைத்து உணவு வழங்குநர்களுக்கும் வணக்கம். காங்கிரஸ் உங்களுக்காக 5 உத்தரவாதங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த உத்தரவாதம் உங்களின் பிரச்சனைகளின் வேர்களை கண்டறிந்து, அவற்றிலிருந்து உங்களை விடுவிக்கும். விவசாயிகளுக்கு காங்கிரஸ் 5 அதிரடி வாக்குறுதிகள். 

1. சுவாமிநாதன் கமிஷன் சூத்திரத்தின் கீழ் MSP க்கு சட்ட அந்தஸ்து உத்தரவாதம்.

2. விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நிரந்தர ஆணையம் அமைக்கப்படும்.

3. பயிர் பாதிப்பு ஏற்பட்டால் 30 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும்.

4. விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கை உருவாக்கப்படும்.

5. விவசாயத்துக்கு பயன்படுத்தும் பொருட்களுக்கு GSTயில் இருந்து வரிவிலக்கு அளிக்கப்படும்.

காங்கிரசின் பேரியக்கத்தின் நோக்கம் நாட்டின் மண்ணை வியர்வையால் பாசனம் செய்யும் விவசாயிகளின் வாழ்க்கையை, மகிழ்ச்சியாக மாற்றும் திசையில் கொண்டு செல்ல, எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் இந்த ஐந்து வரலாற்று முடிவுகள். இந்தியாவின் விவசாய அமைப்பில் 'செழிப்பின் சூரியன்' உதயமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.