மோடி அரசு நம் நாட்டு பெண்களை ஏமாற்றியதோடு அவர்களின் நம்பிக்கையையும் சிதைத்துள்ளது - காங்கிரஸ்

 
congress

மோடி அரசு நம் நாட்டு பெண்களை ஏமாற்றியதோடு அவர்களின் நம்பிக்கையையும் சிதைத்துள்ளது என 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ‘நாரி சக்தி வந்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது.   128வது அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படுகிறது. பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான தொகுதிகளிலும் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு ஒதுக்கப்பட உள்ளது/தொகுதி மறு வரையறை செய்யப்பட்ட பிறகே மகளிர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர இருக்கிறது. மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டாலும் 2024 மக்களவைத் தேர்தலில் இதனை நடைமுறைப்படுத்த முடியாது. தொகுதி மறுவரையின்படி, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை  மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் அதிகரிக்கப்படலாம்.

tn

இந்த நிலையில், இந்த மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் க்ட்சி, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதாவால் நம் நாட்டு பெண்களுக்கு உடனடியாக எந்த பலனும் இல்லை. ஏனெனில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகுதான் இந்த மசோதா அமலுக்கு வரும்.  2021ம் ஆண்டிலேயே நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்படாமலேயே உள்ளது. இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 அல்லது 2028ல் தான் நடைபெறும் என வெறும் தகவலாக சொல்லப்படுகிறது. இந்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகே  தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு, அதன்  பிறகே இந்த மசோதா அமலுக்கு வரும் சூழல் உள்ளது. மோடி அரசு நம் நாட்டு பெண்களை ஏமாற்றியதோடு அவர்களின் நம்பிக்கையையும் சிதைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.