திடீர் ட்விஸ்ட்...காங்கிரஸ் எம்.பிக்களின் எண்ணிக்கை 100 ஆனது!

 
திடீர் ட்விஸ்ட்...காங்கிரஸ் எம்.பிக்களின் எண்ணிக்கை 100 ஆனது!

சங்லி தொகுதி சுயேட்சை எம்.பி. விஷால் பாட்டீல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

மகாராஷ்டிரா சங்லி தொகுதியில் சுயேட்சையாக வென்ற விஷால் பாட்டீல் காங்கிரஸில் இணைந்துள்ளார். விஷால் பாட்டீல் காங்கிரஸில் இணைந்ததன் மூலம் அக்கட்சியின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 100-ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவின் சங்லி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸில் சீட் கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஷால் பாட்டீல். இவர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். விஷால் பாட்டீல் இன்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரை டெல்லியில் சந்தித்து தனது ஆதரவு கடிதத்தை கொடுத்தார். மகாராஷ்டிரா மாநிலம் சங்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால் பாட்டீல் இணைந்தன் மூலம் மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 100 ஆக உயர்ந்துள்ளது.


காங்கிரஸில் இணைந்தது குறித்து மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வஜீத் கதம் கூறுகையில், “ விஷால் பாட்டீலின் ஆதரவுடன், மக்களவையில் காங்கிரஸின் பலம் 100 ஆக உயர்ந்துள்ளது" என்று கூறினார்.