“டிரம்ப் கழுத்தை நெரிப்பதால் நாட்டையே அமெரிக்காவிற்கு விற்றுவிட்டார் மோடி”- ராகுல்காந்தி
டிரம்ப் கழுத்தை நெரிப்பதால் நாட்டையே அமெரிக்காவிற்கு விற்றுவிட்டார் மோடி என மக்களவை எதிர்க்கட்சி ட்தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, “நாம் ஒரு ஆபத்தான காலத்திற்குள் செல்வதை பட்ஜெட் அங்கீகரிக்கிறது. மேலும் டாலர் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து வருவதாகவும் குறிப்பிடுகிறது. ஆனால் புவிசார் அரசியல் மற்றும் நிதி ஆயுதமயமாக்களை சமாளிக்க என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து பட்ஜெட்டில் எதுவும் இல்லை. வர்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவுக்கு இந்தியாவை பிரதமர் மோடி விற்க முயற்சிக்கிறார். அமெரிக்கா தன்னை சர்வாதிகாரியாக காட்டிக்கொள்ள இந்தியாவை பயன்படுத்துகிறது. டிரம்ப் கழுத்தை நெரிப்பதால் நாட்டையே அமெரிக்காவிற்கு விற்றுவிட்டார் மோடி. இந்திய ட்தரவுகளை அமெரிக்கா எடுத்துக் கொள்வதன் மூலம் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என மோடிக்கு தெரியவில்லை. அமெரிக்க டாலரில் வர்த்தகம் நடைபெறுவதை எதிர்க்க உலக அளவில் முன்னெடுப்புகள் எடுக்கப்படுகின்றன. நிலையற்ற தன்மைக்கு இந்தியா தள்ளப்பட்டுவருகிறது.
நம் நாட்டின் வலிமை என்ன என்பதை நாம் உணர வேண்டும். 140 கோடி மக்களே இந்தியாவின் வலிமை. இந்தியாவில் கடந்த காலங்கள் போன்று தற்போது உணவு பொருள் தட்டுப்பாடு இல்லை. தங்கம், வெள்ளி விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவை பற்றி எல்லாம் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இந்தியா எதிர்கொண்டுள்ள புவிசார் அரசியல் நெருக்கடிகள் குறித்தும் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அவையில் உறையாற்ற சுதந்திரம் அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

