மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு? என்பது தான் என்னுடைய முக்கிய கேள்வி- ராகுல்

 
rahul

அதானி விவகாரத்தை திசை திருப்பவே நாடாளுமன்றத்தில் இடையூறுகள் நடைபெறுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

rahul gandhi

நாடாளுமன்ற கூட்டத்திற்கு பின் டெல்லியில் பேசிய பேசிய ராகுல்காந்தில், “லண்டன் கருத்தரங்கில் நாட்டிற்கு எதிராக, நாட்டை அவமதிக்கும் வகையில் நான் எதுவும் பேசவில்லை. மக்களவை சபாநாயகரை சந்தித்து, என் மீது அமைச்சர்கள் வைத்த குற்றச்சாட்டு குறித்து அவையில் பேச அனுமதி கேட்டுள்ளேன். நாளை பேச அனுமதிக்கப்படுவேன் என நம்புகிறேன். சில தினங்களுக்கு முன்பு பிரதமருக்கும், அதானிக்கும் உள்ள தொடர்பு குறித்து பேசினேன், அதானி விவகாரம் குறித்து நான் பேசியது நாடாளுமன்ற அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.  நான் எதையும் புதிதாக குறிப்பிடவில்லை. பொதுத்தளத்தில் இருப்பதையே குறிப்பிட்டேன்.

மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பது தான் என்னுடைய முக்கியமான கேள்வி! அரசும், பிரதமரும் அதானி விவகாரத்தைப் பார்த்து அச்சமடைந்துள்ளனர். அதன் காரணமாகவே அவர்கள் இந்த நகைச்சுவை நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் பிரதமர், அதானி, ஸ்விஸ் வங்கி மேலாளருக்கும் இடையே நடந்தது என்ன?"

Image

என் தரப்பு விளக்கத்தை நாடாளுமன்றத்தில் அளிக்க அனுமதி தருமாறு சபாநாயகரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன். 4 அமைச்சர்கள் என் மீது குற்றம்சாட்டி இருப்பதால் அதுகுறித்து விளக்கமளிக்க அனுமதி கோரினேன். நான் ஒரு எம்.பி., என்பதால் முதலில் நாடாளுமன்றத்தில் பேசவிட்டு பின்னர் உங்களிடம் விளக்குகிறேன்” எனக் கூறினார்.