ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை முடக்க சலசலப்பை உருவாக்குவதை எப்போதாவது பார்த்ததுண்டா?.. காங்கிரஸ்

 
மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் நடத்தப்பட வேண்டும்.. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

அதிகாரத்தில் உள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு சலசலப்பை உருவாக்குவதை எப்போதாவது பார்த்ததுண்டா? என்று பா.ஜ.க. எம்.பி.க்களை காங்கிரஸ் எம்.பி. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி லண்டனில் தனது உரையின்போது இந்திய நாடாளுமன்றத்தையும், ஜனநாயகத்தையும் அவமதித்ததாக பா.ஜ.க. குற்றம் சாட்டி வருகிறது. மேலும், வெளிநாட்டில் இந்திய ஜனநாயகத்தையும், நாடாளுமன்றத்தையும் அவமதித்ததிற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ராகுல் காந்தி

கடந்த 2 தினங்களாக ராகுல் காந்தி விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சரியாக செயல்படவில்லை. இந்நிலையில், ராகுல் காந்தி ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?, மத்திய அரசுதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.

காங்கிரஸ் எம்.பி. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், நாடாளுமன்றத்தை நடத்த அரசாங்கம் விரும்பவில்லை. அதிகாரத்தில் உள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு சலசலப்பை உருவாக்குவதை எப்போதாவது பார்த்ததுண்டா?. ராகுல் காந்தி ஏன் மன்னிப்பு கேட்க  வேண்டும்?. அதற்கு பதிலாக அவர்கள் (மத்திய அரசு) மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.