பிரமாண்ட பந்தல், டன் கணக்கில் இனிப்பு! கொண்டாட்டத்திற்கு தயாரான காங்கிரஸ்

 
modi and rahul

நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என்றும், தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் நிச்சயம் நாங்கள் 295 இடங்களில் வெற்றி பெறுவோம் என இந்தியா கூட்டணி உறுதியுடன் கூறி வருகிறது.

On Rahul Gandhi's birthday, Congress's 'Mohabbat ki Dukaan' greetings |  Latest News India - Hindustan Times

இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் 295 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் திட்டவட்டமாக கூறி வரும் நிலையில், வெற்றிபெறும் பட்சத்தில் இனிப்புகள் வழங்க பல்லாயிரக்கணக்கான இனிப்புகளை காங்கிரஸ் ஆர்டர் செய்துள்ளது. இதேபோல் பல்வேறு இடங்களில் வெற்றி கொண்டாட்டத்திற்கான பல்வேறு ஏற்பாடுகளை காங்கிரஸ் செய்துள்ளது,