பாஜகவை அலறவிட்ட காங்கிரஸ் - 131 இடங்களில் முன்னிலை!

 
congress

கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 131 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. 

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடயவுள்ளதை முன்னிட்டு அங்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 36 மையங்களில் வாக்கு என்னும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் 36 அறைகளில் 4256 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு என்னும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவில் ஆட்சி பொறுப்பில் உள்ள பாஜக தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. கர்நாடக தேர்தல் தற்போதைய நிலவரத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 131 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதேபோல் ஆளுங்கட்சியான பாஜக 64 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 23 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், மற்றவை 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.  பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.