நேரு நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

 
tn

நேரு நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

tn

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு  பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள்  குழந்தைகள் தினமாக  கொண்டாடப்படுகிறது.இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகத்து 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்.  இந்தியாவில் ஜவகர்லால் நேரு பிறந்த நவம்பர் 14 ஆம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடுகிறார்கள்.  நேரு   1964 ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி தனது 74வது வயதில் மாரடைப்பால் காலமானார் . முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். டெல்லியில் உள்ள நினைவிடத்தில் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செய்தனர்.