115 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை.. பாஜக தொடர்ந்து பின்னடைவு - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

 
115 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை.. பாஜக தொடர்ந்து பின்னடைவு - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..


கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள முடிவின் படி காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.  

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  மாநிலம் முழுவதும் மொத்தம் 36 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.  பெரும்பாண்மைக்கு 113 இடங்கள் தேவைப்படும் நிலையில், இதுவரை வெளியான முடிவுகளின் படி 117 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.  ஆளும் கட்சியான  பாஜக 74 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.  மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 29 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.  

election commision

ஆனால் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 223 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், காங்கிரஸ் கட்சி 115 இடங்களில் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாஜக 72 இடங்களிலும், மஜத 30 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. சுயேட்சைகள் 3 இடங்களிலும், பிற கட்சிகள் 3  இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.