இந்திரா காந்தி குடும்பத்தைச் சேராதவர் காங். தலைவராக வேண்டும்! – பிரியங்கா விருப்பம்

இந்திரா காந்தி குடும்பத்தைச் சேராதவர் காங். தலைவராக வேண்டும்! – பிரியங்கா விருப்பம்

காந்தி (இந்திரா) குடும்பத்தைச் சாராதவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வர வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி இருந்து வந்தார்.

இந்திரா காந்தி குடும்பத்தைச் சேராதவர் காங். தலைவராக வேண்டும்! – பிரியங்கா விருப்பம்

நாடாளுமன்றத் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்து புதிய தலைவர் இன்னும் நியமிக்கப்படவில்லை. பொறுப்புத் தலைவராக சோனியா காந்தி நீடித்து வருகிறார். பிரியங்கா காந்தி கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார்.

இந்திரா காந்தி குடும்பத்தைச் சேராதவர் காங். தலைவராக வேண்டும்! – பிரியங்கா விருப்பம்
இந்த நிலையில் பிரியங்கா காந்தி அளித்துள்ள பேட்டியில், “இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் யாரும் காங்கிரஸ் கட்சித் தலைவராக வரக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதை முழுமையாக நான் ஏற்கிறேன். கட்சி தன்னுடைய பாதையை தானே தேர்வு செய்ய வேண்டும்” என்றார்.

இந்திரா காந்தி குடும்பத்தைச் சேராதவர் காங். தலைவராக வேண்டும்! – பிரியங்கா விருப்பம்
தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பின்னுக்குத் தள்ளப்படுவது பற்றிக் கேட்ட போது, “புதிய ஊடக உத்திகளை உடனடியாக புரிந்துகொள்ளும் திறன் காங்கிரஸ் கட்சிக்கு குறைவாக உள்ளது. அதைப் புரிந்துகொள்வதற்குள் கட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடுகிறது” என்றார்.