மஹா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு அரைகுறை ஏற்பாடுகளே காரணம்-காங்கிரஸ் கண்டனம்

மஹா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு அரைகுறை ஏற்பாடுகளே காரணம் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அமாவாசையை முன்னிட்டு புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்த ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் மேளா பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பு உடைந்தது. அதிகாலை 2 மணிக்கு தடுப்பு உடைந்த நிலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள பதிவில், மஹா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு அரைகுறை ஏற்பாடுகளே காரணம். பல கோடி ரூபாய் செலவு செய்து இவ்வளவு மோசமான ஏற்பாடுகள் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. VIPகளுக்கு கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பக்தர்களின் அடிப்படை வசதிகள், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.