ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
’ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை(டிச. 12) ஒப்புதல் அளித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருந்த போதிலும்‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான இரு மசோதாக்களும் மக்களவையில் இன்று செவ்வாய்கிழமை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி, "ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாக்கள் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு மீதும், ஜனநாயகத்தின் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல். மக்களவையின் பதவிக்காலத்திற்கு ஏற்றவாறு மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலத்தை மாற்றியமைக்க முடியாது. இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என மணீஷ் திவாரி கூறியுள்ளார்.


