காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது

 
congress
39 பெயர்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. 

 

மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன.  

 

Rahul and Kharge

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக 39 வேட்பாளராக அடங்கிய பட்டியலை காங்கிரஸ் கட்சியின் தலைமை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார், சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ராஜ்நந்த்கான் தொகுதியிலும், கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் ஷிமோகா தொகுதியிலும், சசிதரூர் திருவனந்தபுரம் தொகுதியிலும், ஆலப்புழா தொகுதியில் கே.சி.வேணுகோபால் போட்டியிடுகிறார்.