புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா - காங்கிரஸ் புறக்கணிக்க முடிவு?

 
Rahul

தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடம் 1927 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது . இங்கு தற்போது பாதுகாப்பு குறைபாடு, இடவசதி ஆகியவை ஏற்பட்டுள்ளதன் காரணமாக,  புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்  நாட்டினார்.ரூ. 970 கோடி ரூபாய் செலவில் நான்குமாடிக்கொண்ட முக்கோண வடிவிலான கட்டடமாக சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

tn

 மக்களவையில் 888 பேரும் , மாநிலங்களவையில் 300க்கும் மேற்பட்டோரும் அமரும் வகையிலும் ,  இரு அவை பங்கேற்கும் கூட்டுக் கூட்டத்தின் போது 1280 உறுப்பினர்கள் வரை அமரும் வகையில் இந்த கட்டிடம் வசதி படைத்ததாக கட்டப்பட்டுள்ளது.  வருகிற 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பிரதமர் மோடி புதிய கட்டிடத்தை திறந்து வைக்க கூடாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட வலியுறுத்தி வருகின்றனர் . திறப்பு விழா தேதியான மே 28 சாவக்கரின் பிறந்தநாள்.  அந்த தேதியை தேர்ந்தெடுத்ததிற்கும்  எதிர்க்கட்சிகள் கண்டனம்  தெரிவித்துள்ளன.  அத்துடன் குடியரசுத் தலைவர் என்ற முறையில் திரௌபதி முர்முதான் நாட்டின் புதிய பாராளுமன்றத்தை திறந்து வைக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

rahul

இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் இந்நிகழ்ச்சியை புறக்கணிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  திரிணாமுல் காங்கிரஸ்,  மார்க்சிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் , ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் திறப்பு விழாவில் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளன.  திறப்பு விழா அழைப்பு கிடைத்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சில கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியும்  விழாவை புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.