ஹேமந்த் சோரன் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

 
tt

ஜார்க்கண்ட் முதல்வராக மீண்டும் பதவியேற்ற ஹேமந்த் சோரன் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது.

tt

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி ஜார்க்கண்டில் நடக்கிறது. பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை ஜன.31இல் கைது செய்தது. 

Hemant Soren arrested by ED in land scam case

ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் சம்பாய் சோரன் முதல்வராக பதவியேற்றார். பண மோசடி வழக்கில் EDயால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் கடந்த 28ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

tt

சம்பாய் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் ஜூலை 4ம் தேதி மீண்டும் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். 81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் பேரவையில் ஜேஎம்எம் 27, காங், 17, ஆர்ஜேடி 1 எம்.எல்.ஏ. உள்ளனர்.