ரூ.40 லட்சம் பெற்று மோசடி செய்ததாக நடிகை ரோஜா மீது கவுன்சிலர் புகார்

 
roja flight

புத்தூர் நகராட்சி தலைவர் பதவி  தருவதாக கூறி ரூ.40 லட்சம் பணம் பெற்று கொண்டு ஏமாற்றியதாக  அமைச்சர் ரோஜா மீது புகார் எழுந்துள்ளது.

Etv Bharat

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா மீது புத்தூர் நகராட்சி கவுன்சிலர் புவனேஸ்வரி குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய புவனேஸ்வரி, “புத்தூர் நகராட்சியில் 17-வது  வார்டில் போட்டியின்றி வெற்றி பெற்றேன். தலைவர் பதவியை தனக்கு வழங்குவகாக  அமைச்சர் ரோஜாவின் அண்ணன் குமாரசாமி என்னிடம் ரூ.70 லட்சம் கேட்டார். ஆனால் நான்  ரூ.40 லட்சம் தருவதாக கூறினேன். அதற்கு சம்மதம் தெரிவித்ததால் இரண்டு தவணையாக பணத்தை வழங்கினேன்.  இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை வழங்கவில்லை. இப்போது, ​​பதவி குறித்து கேட்டபோது, ​​தேர்தல் முடிந்த பின்னர் தலைவர் பதவி தரப்படும் என கூறுகின்றனர்.

தேர்தலுக்கு பின் எனக்கு பதவி தேவையில்லை , நான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டும் பணம் தரவில்லை. பணம் குறித்து, அமைச்சர் ரோஜாவுக்கு தகவல் அனுப்பியும், நேரில் சென்று சந்தித்தும் எந்த பதிலும் இல்லை. பட்டியலின பெண்ணான எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என்றார்.

இதேபோல் ரோஜாவிற்கு வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டாம் என அதே கட்சியை சேர்ந்த ஜில்லா பரிஷத் உறுப்பினர்கள் போர்கொடி உயர்த்தி உள்ளனர். வடமாலபேட்டை மண்டலத்தில் வளர்ச்சி நிதி ஒதுக்கவிடாமல் தடுப்பதாகவும், ஜில்லா பரிஷத் அலுவலகத்தில் தங்களுக்கான அறை ஒதுக்காமல் தடுக்கிறார் என்றும், மண்டல வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக ரோஜா இருப்பதால் அவருக்கு நகரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க கூடாது  என முதல்வர் ஜெகன் மோகனுக்கு வேண்டுகொள் விடுத்துள்ளனர்.