வர்த்தக சிலிண்டர் விலை மேலும் ரூ.102.50 அதிகரிப்பு..

 
வர்த்தக சிலிண்டர் விலை மேலும் ரூ.102.50 அதிகரிப்பு..


19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி சிலிண்டர் விலை  102 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து, ரூ. 2,355.50-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வர்த்தக சிலிண்டர் விலை மேலும் ரூ.102.50 அதிகரிப்பு..

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம். சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள்  நிர்ணயித்து வருகின்றன.  இதில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படுகிறது. கேஸ் சிலிண்டர்களிம் விலை ஒவ்வொரு மாதமும்  மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

பணம்

அந்தவகையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின்  விலை ரூபாய் 250 உயர்த்தப்பட்டது. தொடர்ந்து  மே 1 ஆம் தேதியான இன்று  இந்த மாதத்திற்கான கேஸ் விலையை நிர்ணயம்  நிறுவனங்கள் அறிவித்துள்ளன.  இதில், வர்த்தக  ரீதியாக பயன்படுத்தப்படும்   19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ. 102.50 க்கு உயர்ந்துள்ளது. இதனால்  வணிக பயன்பாட்டிற்கான  கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 2,253-லிருந்து ரூ. 2,355.50- ஆக அதிகரித்துள்ளது. மேலும்  5 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ. 655-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.