வாகன தணிக்கை ஈடுபட்டிருந்த ஆய்வாளரை கத்தியால் வெட்டிய இளநீர் வியாபாரி!

 
coconut Vendor Attacks Motor Vehicle Inspector With Knife

ஆந்திர மாநிலம் கக்கிநாடாவில் சரக்கு வேனில் இளநீர் விற்பனை செய்து வந்த  வாகனத்திற்கு உண்டான ஆவணங்கள் கேட்டதற்கு உதவி மோட்டார் வாகன ஆய்வாளரை கத்தியால் வெட்டிய இளநீர் வியாபாரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Andhra Pradesh Shocker: Coconut seller attacks brake inspector with knife  in Andhra Pradesh (Watch Video)

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள ஜில்லா பரிஷத் சந்திப்பில் சாலையோரம்  வெங்கடதுர்க பிரசாத் சரக்கு வேனில் இளநீர் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உதவி மோட்டார் வாகன   ஆய்வாளர் வாகனத்திற்கு உண்டான ஆவணங்கள்,  லைசன்ஸ்  கேட்டுள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதில் கோபமடைந்த   இளநீர்  வியாபாரி வெங்கட துர்கா பிரசாத், இளநீர்  வெட்ட பயன்படுத்தும்  கத்தியால் உதவி மோட்டார் வாகன  ஆய்வாளர் சின்னாராவ் மீது பல இடங்களில்  தாக்கினார். இதில் ஆய்வாளரின் விரல் சம்பவ இடத்தில்  துண்டாகி சாலையில் விழுந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரை ஆட்டோவில் காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து டி.எஸ்.பி. முரளிகிருஷ்ணா தலைமையிலான போலீசார், இளநீர் வியாபாரியை பிடித்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.