சந்திரபாபு நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 
t

சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Chandrababu Naidu proposes to establish a music university and a national award in commemoration of SPB

ஆந்திராவில் உள்ள  175 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவையில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில்  சுமார் 156 தொகுதிகளை கைப்பற்றி முன்னிலை வகித்து வருகிறது தெலுங்கு தேசம் கட்சி,  பாஜக , ஜனசேனா கூட்டணி.   தெலுங்கு தேசம் 130வது தொகுதிகளிலும்,  ஜனசேனா 20 தொகுதிகளிலும் , பாஜக ஏழு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதே நேரம் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.  இதன் மூலம் மீண்டும் முதல்வர்  அரியணையில் ஏறுகிறார் சந்திரபாபு நாயுடு. அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து. உங்களின் நல்லாட்சி மக்களின் கனவு மற்றும் நம்பிக்கையை நிறைவேற்றி, செழிப்பையும் முன்னேற்றத்தையும் அளிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.