தெலுங்கு தேசம் - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இடையே மோதல்! ஆந்திராவில் பரபரப்பு

 
a

ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது தெலுங்கு தேசம் - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

Andhra Town Tense After Violent YSR Congress-Telugu Desam Party Clash
ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது தெலுங்கு தேசம் - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது. எம்.பி. மிதுன் ரெட்டி கார் மீது தெலுங்கு தேசம் கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது. ஆந்திராவில் அக்டோபர் 28ல் நடக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வேட்புமனுத்தாக்கல் செய்ய சென்ற ஒய்எஸ்ஆர் காங்கிரசாரை தடுத்ததாக தெலுங்கு தேசம் கட்சியினர் மீது புகார் அளித்துள்ளனர். இந்த தாக்குதலில் கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 

புங்கனூரில் தெலுங்கு தேசம் கட்சி (TDP) மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி (YSRCP) தொண்டர்களிடையே மோதல்கள் ஏற்பட்டதாகவும், ராயச்சோட்டியில் உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் அருகே வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் மிதுன் ரெட்டியின் வாகன அணிவகுப்பை மறித்து, கற்கள், தடிகளாலும், இரும்புக் கம்பிகளாலும் வாகனங்களைத் தாக்கியதாக ஒய்.எஸ்.ஆர்.சி.பி குற்றம் சாட்டியுள்ளது. ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர்களுக்குச் சொந்தமான பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதியில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, இரு கட்சிகளின் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் கல் எறிதல் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.