“போராட்டத்தில் பாஜகவினர் ஊடுருவல்! போலீஸ் மீது கல்லெறிந்து எங்கள் மீது பழிபோடுகிறார்கள்” - அபிஜீத் திப்கே

 
s

நீட் விவகாரத்தில் பல மாணவர்கள் உயிரிழந்த பிறகும் கூட, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிர​தான் உங்களுக்கு ஏன் அவ்​வளவு முக்கியமானவராக இருக்​கிறார் என்​பதை நாட்​டுக்​குத் தெரிவியுங்​கள் என CJP நிறுவனர் அபிஜித் தீப்கே  தெரிவித்துள்ளார்.

CJP’s ideology would be secular, democratic, and socialist—striving for  social justice: Abhijeet Dipke

டெல்லி ஜந்தர் மந்தரில் செய்தியாளர்களிடம் பேசிய கரப்பான் ஜனதா பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே, “கடந்த 25 நாட்களாக சமூக சேவகர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார். இதுதொடர்பாக பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்கவில்லை. அவர் தனது மவுனத்தை கலைக்க வேண்டும். பிரதமர் மோடியின் அரசியல் என்பது வெறும் தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்துவதும், தேர்தலில் வெற்றி பெறுவதும் என்றே நினைக்கிறார். மக்களுக்கு பொறுப்புடனும், கடமையுடனும் பதிலளிப்பதும் அரசியல் கடமைகளில் ஒன்று. நீட் விவகாரத்தில் பல மாணவர்கள் உயிரிழந்த பிறகும் கூட மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உங்களுக்கு ஏன் அவ்வளவு முக்கியமானவராக இருக்கிறார் என்பதை நாட்டுக்கு தெரிவியுங்கள். பிரதமர் இந்தப் போராட்டத்தைக் கவனித்து ட்வீட் செய்ய 34 நாட்கள் ஆகியுள்ளன. அரசாங்கம் இன்னும் அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பாதுகாப்பது வெட்கக்கேடானது.


மாணவர் போராட்டத்தை சீர்குலைக்கும் விதமாக வெளியாட்கள் சிலர் நுழைக்கப்படுகின்றனர். காவல் துறையினரே ஒரு லாரி நிறைய கற்களை வரவழைத்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்திற்குள் ஊடுருவியுள்ளனர்.அவர்கள்தான் காவல் துறையினர் மீது கல்லெறிந்து எங்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர்” என்றார்.