விபத்தில் சிக்கிய பிரபல நடன இயக்குநர்!

 
a

தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நடன இயக்குநர் சேகர் மாஸ்டர் பயணித்த கார், லாரி மீது மோதியதில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Image

ஷம்ஷாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லப்பள்ளி கிராமத்திற்கு அருகே, காலை சுமார் 6 மணியளவில் தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நடன இயக்குநர் சேகர் மாஸ்டர் பயணித்த கார், லாரி மீது மோதியது. இதில் அவர் நல்வாய்ப்பாக சில காயங்களுடன் உயிர் தப்பினார். அவருடன் காரில் சென்ற மற்ற மூன்று நபர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிரஞ்சீவியின் 'காகா' பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில், ஷம்சாபாத் அருகே வேகமாக வந்த லாரி அவரது கார் மீது மோதியது.

விபத்தில் சேகரின் கார் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து நடன மாஸ்டர் சேகர் கூறுகையில், "நேற்று இரவு திரைப்படப் படப்பிடிப்பு இருந்தது. அதை முடித்துவிட்டு, இன்று அதிகாலை சுமார் 6 மணியளவில் நாங்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. காரில் நாங்கள் நான்கு பேர் இருந்தோம், எங்களுக்கு எதுவும் ஆகவில்லை. நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம், கார் மட்டுமே சேதமடைந்துள்ளது. அனைவரும் இதுதொடர்பாக எனக்கு தொலைப்பேசி மூலம் அழைத்தும் குறுஞ்செய்தி அனுப்பியும் வருகிறார்கள். நான் ஐயப்ப விரதத்தில் இருக்கிறேன், அவர்தான் எங்களைக் காப்பாற்றினார். இனி  நான் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன்," என்றார்.