பிரதமர் பதவி ஆசை, நிதிஷ் குமாரின் நோக்கத்தை அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் அறிந்திருப்பார்கள்.. சிராக் பஸ்வான்

 
ராம் விலாஸ் பஸ்வானுக்கு இருதய அறுவை சிகிச்சை…. அவசியம் என்றால் மேலும் ஒரு அறுவை சிகிச்சை.. சிராக் பஸ்வான் தகவல்


பிரதமர் பதவி மீதான நிதிஷ் குமாரின் ஆசையை எதிர்க்கட்சி தலைவர்கள் அறிந்திருப்பார்கள் என்று பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்தார்.

எதிர்வரும் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் உள்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து உள்ளன. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முக்கிய பங்கினை வகிக்கிறார். இந்த சூழ்நிலையில்,  எனக்கு பிரதமர் பதவி ஆசை இல்லை என்றும், மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராடும் முயற்சிக்கு தலைமையேற்பேன் என்று நிதிஷ் குமார் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், நிதிஷ் குமாரின் பிரதமர் ஆசை குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கு  தெரியும் என்று சிராக் பஸ்வான் தெரிவித்தார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு
இது தொடர்பாக சிராக் பஸ்வான் கூறியதாவது: லோக்  ஜன்சக்தி கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான சிராக் பஸ்வான் கூறியதாவது: பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பிரதமர் பதவி ஆசை இல்லை என்றால், எதிர்க்கட்சி தலைவர்களை ஏன் சந்திக்கிறார்?. மத்தியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள நிதிஷ் குமார் முயற்சி செய்து வருகிறார். காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் அந்த கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோர் I.N.D.I.A. கூட்டமைப்பின் உயர் மட்டத்திற்கு உயர்த்தப்படுவார்கள் என்ற அச்சத்திற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பயப்படுவார். ராகுல் காந்திக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படுமா என்று அவர் பயப்படுவார். நிதிஷ் குமார் அவர்களின் தலைமையின் கீழ் பணியாற்ற விரும்ப மாட்டார். 

ஆம் ஆத்மி

மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டத்தில் பிரதமர் பதவியை விரும்பும் எதிர்க்கட்சிகளின் உயர்மட்ட தலைவர்களும் மேடையை பகிர்ந்து கொள்வார்கள். நிதிஷ் குமாரின் நோக்கத்தை அவர்கள் அறிந்திருப்பார்கள். காங்கிரஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தொடங்கும் போது,  காங்கிரஸின் செல்வாக்கு I.N.D.I.A. கூட்டணியில் பரவியவுடன், அது கூட்டாளிகளின் அமைதியின்மைக்கு வழிவகுக்கும். 2024 மக்களவை தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவரின்  அறிக்கைக்கு சில நாட்களுக்கு பிறகு ஆம் ஆத்மி கட்சி I.N.D.I.A. கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.