நிதிஷ் குமார் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்திருந்தால் பீகாரிகள் புலம்பெயர்ந்திருக்க மாட்டார்கள்.. சிராக் பஸ்வான்

 
பீகார் அரசாங்கத்தில் மக்கள் அதிருப்தி, தேர்தல் முடிவுகளை பாதிக்கலாம்.. மோடிக்கு கடிதம் எழுதிய சிராக் பஸ்வான்..

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்திருந்தால்  பீகாரிகள் மாநிலத்தில் பணிபுரிந்திருப்பார்கள், புலம்பெயர்ந்திருக்க மாட்டார்கள் என்று சிராக் பஸ்வான் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது போன்ற போலி வீடியோ பீகார் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்பட்டன. இதனால் வடமாநிலங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பீகார் முதல்வர் தமிழக முதல்வருடன் தொலைபேசியில் பீகார் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து பேசினார். மேலும், பீகார் அரசு அதிகாரிகள் அடங்கிய குழு தமிழகத்துக்கு வந்து தங்களது மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து தமிழக காவல் துறை மற்றும் அரசு துறை அதிகாரிகளுடன் பேசியது. 

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

இந்நிலையில் பீகாரிகள் வெளிமாநிலங்களுக்கு வேலைக்கு செல்ல நிதிஷ் குமார்தான் காரணம் என்று லோக் ஜன்சக்தி கட்சியின்தேசிய தலைவர் சிராக் பஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சிராக் பஸ்வான் கூறியதாவது:  எனது மாநிலத்தின் (பீகார்) முன்னேற்றத்திற்காக உழைத்திருந்தால், அவர்கள் எங்கள் சொந்த மாநிலத்தில் பணிபுரிந்திருப்பார்கள், புலம்பெயர்ந்திருக்க மாட்டார்கள். எனது மாநிலத்தில் வாய்ப்பு இல்லாததே இதற்கு காரணம். இந்த குறிப்பிட்ட சூழ்நிலைக்கு காரணமான ஒரே நபர் நமது முதல்வர் நிதிஷ் குமார் தான். 

அமித் ஷா

கோயம்புத்தூரில் இருந்து மக்கள் என்னை தொடர்பு கொண்டு தாக்கப்பட்டதாகவும், மிரட்டப்பட்டதாகவும் கூறினர். இந்த விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் தமிழக முதல்வர் மற்றும் அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மாநிலத்தின் எந்த மாவட்டத்திலும் இது நடந்திருந்தாலும் முதல்வர் செயல்பட வேண்டும் மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வெறும் வதந்தியாக இருந்தாலம், இதை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக கடந்த 3ம் தேதியன்று, புலம்பெயர்ந்தோர் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குல் தொடர்பான விவகாரத்தில் தலையிடுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சிராக் பஸ்வான் கடிதம் எழுதினார்.