பக்கத்து வீட்டு சிறுமியை அடைத்துவைத்து பலாத்காரம்! அலறிய சிறுமி! போலீசார் மீது தாக்குதல்
தெலங்கானாவில் பக்கத்து வீட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்டம் குடிஹத்னூரை சேர்ந்த இளைஞர் போஷெட்டி (21) பக்கத்து வீட்டில் வசிக்கும் மனநலம் பாதித்த மைனர் சிறுமிக்கு சாக்லெட் தருவதாக கூறி நேற்று இரவு தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். மகள் காணாமல் போனதால் பல இடங்களில் பெற்றோர் தேடி வந்த நிலையில் போஷெட்டி வீட்டில் இருந்து தங்கள் மகளின் சப்தம் கேட்பதை அறிந்து அங்கு சென்று கதவைத் தட்டி சிறுமியை வெளியில் வரவழைக்க முயற்சித்தனர்.ஆனால் போஷெட்டி வீட்டின் கதவை உட் பக்கமாக தாலிட்டு சிறுமியை வெளியில் விடாமல் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டான். எனவே தாங்கள் மகளுக்கு ஏற்பட்ட நிலை குறித்து பெற்றோர் உடனடியாக தொலைபேசி மூலம் இச்சோடா நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். இருப்பினும் நீண்ட நேரம் போலீசார் அங்கு வந்து சேரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் ஆகியோர் அந்த போஷொட்டி வீட்டுக்கு தீ வைத்தனர். அதே நேரத்தில் அங்கு வந்த போலீசர் வீட்டின் கதவை உடைத்து திறந்து சிறுமியை மீட்டனர்.
காலம் தாழ்த்தி நிதானமாக வந்த போலீசார் மீதும் கடும் அதிருப்தி அடைந்த கிராம பொதுமக்கள் கற்கள்,கட்டைகள் ஆகியவற்றால் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் ஒரு காவல் ஆய்வாளர் ஒரு உட்பட ஐந்து காவலர்கள் காயமடைந்துள்ளனர். பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமியை மீட்ட போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
போலீசார் மீது தாக்குதல் நடத்திய பொதுமக்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான முழு விவரங்கள் பற்றி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிற்கு வைத்த தீ காரணமாக காயமடைந்த போஷெட்டியை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
போஷெட்டி மீதும் மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை வீட்டில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கிராமத்தில் அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பை தீவிர படுத்தப்படுத்தி உள்ளனர்