விஜயவாடா கனக துர்க்கையம்மன் கோவிலில் முதல்வர் விஜய் சிறப்பு பூஜை
Updated: Oct 13, 2026, 17:16 IST1791891971091
ஆந்திர மாநிலத்தில் கனகதுா்கா கோவிலில் சாமி தாிசனம் செய்த முதல்வா் விஜய் சிறப்பு பூஜையில் பங்கேற்றாா்.

ஆந்திர மாநிலம் கனகதுர்கை அம்மன் கோவிலில் முதலமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்தார். 4 அடி உயரத்தில் 8 கரங்களுடன் சுயம்புவாக காட்சி அளிக்கும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தினார். வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை செய்யப்பட்டு முதல்வா் விஜய்க்கு அட்சதை தூவி பண்டிதா்கள் ஆசீா்வாதம் செய்தனா். கனகதுர்கா கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பின் வெளியே வந்த தமிழக முதல்வரை பார்த்து "விஜய் விஜய்" என செல்ஃபோனில் வீடியோ எடுத்தபடி ஆந்திர மக்கள் ஆர்ப்பரித்தனர். அவர்களை பார்த்த நடிகர் விஜய், புன்னைகைத்த படியே கையசைத்தார்.

