முதல்வர் மகள் கவிதா நேரில் ஆஜராக அமலாக்க துறை சம்மன்

 
k

முதல்வர் சந்திரசேகர ராவ் மகன் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.    

 தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர ராவ் . இவரது மகள் கவிதா.  மேலவை உறுப்பினரான கவிதாவை டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் விவகாரத்தில் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது .

kk

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தொடர்புடைய அமித் அரோராவை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கும் காவல் அறிக்கையில் கவிதாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.   இதுவரை நடந்த விசாரணையில் சரத் ரெட்டி,  மகுந்தா சீனிவாலு ரெட்டி , கவிதா ஆகியோரால் நடத்தப்படும் சவுத் குருப்பிடம் இருந்து அமித் அரோரா உட்பட பல்வேறு நபர்களால் ஆம் ஆத்தி கட்சி தலைவர்களுக்கு விஜய் நாயர் மூலம் 100 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது .

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு கவிதா லஞ்சம் கொடுத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டிருக்கிறது.

 இதே போல் வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதி அன்று சிபிஐ 7 பேர் மீது தனது முதல் குற்ற பத்திரிகை டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து கவிதாவிடம் சிபிஐ விசாரணை நடத்த முடிவு செய்தது .  அதன்படி ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் கவிதா இல்லத்திற்கு டெல்லியில் இருந்து சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி அன்று நேரில் சென்று விசாரணை நடத்தினர் .

அப்போது பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.  அந்த கேள்விகளுக்கு பெற்ற பதில்களை பதிவு செய்து கொண்டனர் . இந்த விசாரணை 7 மணி நேரம் நீடித்தது. இந்த விசாரணையை ஒட்டி கவிதாவின் வீடு அமைந்திருக்கும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது .  இந்த நிலையில் தற்போது நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.