சென்னை திருக்குடைகள் திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டது

சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்ட திருக்குடைகள் ஏழுமலையான் கோயிலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
திருப்பதி திருக்குடைகள் சேவா சமிதி அறக்கட்டளை மற்றும் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் சென்னையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து குடை ஊர்வலத்தை கடந்த 13-ம் தேதி தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து 21 திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வழிநெடுகிலும் உள்ள முக்கிய கோயிலுக்கு குடை வழங்கப்பட்டு திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு 2 குடைகள் வழங்கப்பட்டது.
பின்னர் 2 குடைகள் திருமலைக்கு கொண்டு செல்லப்பட்டு திருமலையில் உள்ள வைபவ உற்சவ மண்டபத்தின் முன்பு தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இதில் இந்து விஸ்வ அகில பாரத இணை செயலாளர் நாகராஜன், தமிழகம் கேரளா அமைப்பு பொறுப்பாளர் கேசவராஜ், வட தமிழக அமைப்புச் செயலாளர் ராமன், திருக்குடை சேவா டிரஸ்டி ராமலிங்கம், தணிகைவேல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.