சென்னை- பெங்களூர் இடையேயான டபுள் டக்கர் ரயில் தடம்புரண்டது!

 
Chennai-Bengaluru AC Double Decker Express Train Derails Near Bangarapet

சென்னை- பெங்களூர் இடையிலான டபுள் டக்கர் ரயில் கர்நாடகாவின் பங்காருபேட்டை அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

Train No 22625 derailed in Kolar district of Karnataka.

இன்று காலை சுமார் 11:30 மணியளவில், ரயில் எண். 22625 சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் 1 ஜோடி சக்கரம் (பின்புறத்தில் இருந்து 2வது பெட்டி), பிசாநத்தம் நிலையத்தில், பங்காரப்பேட்டையில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் தடம் புரண்டது.  

உடனடியாக பெங்களூரு கோட்டத்தின் மூத்த அதிகாரிகள் விபத்து நிவாரண ரயிலுடன் (ART) மீட்புக்காக விரைந்தனர். முன் பகுதி, அதாவது ரயிலின் பாதிக்கப்படாத பகுதி, மற்றொரு எஞ்சின் மூலம் அனைத்து பயணிகளுடன் பங்காரப்பேட்டைக்கு புறப்பட்டது. தடம் புரண்ட C1 பெட்டியின் பயணிகள்  C2,C3&C4 இல் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள்/பொதுமக்களின் வசதிக்காக கே.எஸ்.ஆர் பெங்களூரு, பெங்களூரு கேன்ட் மற்றும் பங்காரப்பேட்டை நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. நல்வாய்ப்பாக இருந்த விபத்தில் பயணிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.