ரூ.1.80 கோடி மோசடி புகார்- நடிகர் ஆர்யா மீது வழக்குப்பதிவு
ரூ.1.80 கோடி மோசடி புகாரில் ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் காவல்நிலையத்தில் நடிகர் ஆர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ஆர்யா, 'அனந்தன் காடு' படத்தயாரிப்பாளர் வினோத் மற்றும் ஆர்யாவின் உதவியாளர் கிஷோர் மீது ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2025ல் தாஹேர் சினி டெக்னிக் நிறுவனத்திடம் 'அனந்தன் காடு' படப்பிடிப்புக்கான அதிநவீன உபகரணங்களை ரூ.2. 12 கோடிக்கு வாடகைக்கு எடுத்த நிலையில், ரூ.1.80 கோடியை தரவில்லை என்ற புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதிப் பணத்தை கேட்க சென்ற, தாஹேர் டெக்னிக் கணக்காளர் ஜாவித் அலியை மிரட்டியதாக மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனந்தன் காடு படத்துக்காக நவீன கேமராக்கள், விளக்குகள் மற்றும் உபகரணங்களை படக்குழுவினர் வாடகைக்கு எடுத்துள்ளனர்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதேசமயம் ஆர்யாவும், தயாரிப்பு நிறுவனமும் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.

