தெலங்கானா முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி
Sun, 12 Mar 20231678624237475

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு திடீரென உடல்நலக்குறைவு மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தெலங்காமா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவமனையின் தலைவர் நாகேஷ்வர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் கே. சந்திரசேகர் ராவுக்கு இன்று காலை வயிற்றில் அசௌகரியம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை பரிசோதித்து பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அதைத் தொடர்ந்து சி.டி. மற்றும் எண்டோஸ்கோபி செய்யப்பட்டது. வயிற்றில் ஒரு சிறிய புண் கண்டறியப்பட்டது. மற்ற அனைத்து இயல்பாக உள்ள நிலையில் மருத்துவ சிகிச்சை தொடங்கி நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.