தென் மாநிலங்களின் உரிமைகளை சந்திரபாபு பாதுகாப்பார் - முதலமைச்சர் நம்பிக்கை!

 
dd

தென் மாநிலங்களின் உரிமைகளை சந்திரபாபு பாதுகாப்பார் என்று முதலமைச்சர் ஸ்டாலின்  நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

tt

என்.டி.ஏ கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யவுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மோடி மீண்டும் ஆட்சியமைக்க சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், திரு. சந்திரபாபு நாயுடுவை டெல்லி விமான நிலையத்தில் சந்தித்தேன். தலைவர் கலைஞரின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தேன். அவர் மத்திய அரசில் முக்கியப் பங்காற்றுவார், தென் மாநிலங்களுக்காக வாதிடுவார், நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என்று நான் நம்புகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.