ஆந்திர முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு
Updated: Jun 11, 2024, 07:57 IST1718072836123
ஆந்திர மாநில முதல்வராக தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்க உள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம்,ஜனசேனா, பாஜக கூட்டணி 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவைதொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், நாளை சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வர் பதவி ஏற்க உள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சியானது கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் அருகே உள்ள கேசரபல்லி ஐடி பார்க் மைதானத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமான அரங்கில் நடைபெறவுள்ளது.பிரதமர் மோடி மற்றும் 7 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ள நிலையில் விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.