ஆட்சிக்கு வந்தவுடன் பழிவாங்கும் அரசியல் இருக்காது- சந்திரபாபு நாயுடு

 
Chandrababu Naidu proposes to establish a music university and a national award in commemoration of SPB

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற தலைவராக சந்திரபாபு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடாவில் தேசிய ஜனநாயக கூட்டணி  சட்டமன்ற கட்சி கூட்டத்தில்  சட்டமன்ற கூட்டணி கட்சி தலைவராக சந்திரபாபு பெயரை ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் முன்மொழிந்தார். எம்எல்ஏக்கள் சந்திரபாபுவை சட்டப்பேரவைத் தலைவராக   கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். தேர்வு செய்யப்பட்ட  தீர்மானம் இன்று  ஆளுநருக்கு வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு, பவன், புரந்தேஸ்வரி, கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர்  பங்கேற்றனர். இதில் பேசிய சந்திரபாபு கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் எவ்வாறு ஆட்சி நிர்வாகம் இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாக இருந்ததால் மக்கள் இந்த தீர்ப்பு வழங்கினர். எனவே ஆட்சிக்கு வந்தவுடன் பழிவாங்கும் அரசியல் இருக்காது. அதேநேரத்தில் தவறு செய்தவர்களை சும்மா விடக்கூடாது இல்லையென்றால் அதுவே தவறு செய்ய வழிவகுக்கும் என்பதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.