திருப்பதி லட்டுவில் விலங்குகள் கொழுப்பு கலப்படம்- சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

 
Chandrababu Naidu proposes to establish a music university and a national award in commemoration of SPB

ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் கூட விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா: பக்தர்களுக்காக 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்தது. இதனை ஒட்டி மங்களகிரியில் நடந்த கூட்டணி கட்சிகளின் வெற்றி விழாவில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு,  “ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோயில்   அன்னப்பிரசாதங்கள் கூட தரமற்ற பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.   லட்டு பிரசாதம் செய்வதற்கு பயன்படுத்தும் நெய் விலங்குகள் கொழுப்பு கலப்பினும் செய்யப்பட்டவை பயன்படுத்தப்பட்டன. தற்போது அனைத்தையும் மாற்றி தரமானவை கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டேன். அதன்படி தற்பொழுது தரமான நெய் கொள்முதல் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தரமான மற்றும் சுவையான பிரசாதங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஏழுமலையான் கோயில் இருப்பது நமக்கு கிடைத்த பாக்கியம். உலகத்தில் உள்ள அனைவரும் இங்கு வருகிறார்கள். எனவே அந்த புனித தன்மையை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.

Chandrababu Naidu news: Chandrababu Naidu using BJP to stall welfare  schemes, alleges Jagan Mohan Reddy - The Economic Times

கடந்த 5 ஆண்டுகளில் விசாகப்பட்டிணம்  ரயில்வே மண்டலம் அமைக்க மத்திய அரசு நிலம் கையகப்படுத்தி வழங்கும்படி கூறியும்  அவர்களால் வழங்க முடியவில்லை.   ஆனால் இந்த  அரசாங்கம் வந்ததும் நிலத்தை கையகப்படுத்தி வழங்கப்பட்டுள்ளது. எனவே  விசாகப்பட்டினம் ரயில்வே மண்டல பணிகள் விரைவில் தொடங்கும். தேர்தலில் போது கொடுத்த இலவச கேஸ் சிலிண்ட வழங்கும் திட்டம் தீபாவளி முதல் வழங்கப்படும். தேர்தலில் கொடுத்த வாக்குறுதி ஒவ்வொன்றாக நிறைவேற்றி கொண்டு மாநில வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்” என்றார்.

இதில் ஜனசேனா கட்சி தலைவரும் துணை முதல்வருமான பவன் கல்யாண், மாநில பாஜக தலைவர் எம்.பி. புரந்தேஸ்வரி மற்றும் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.