யாராவது வாயை திறந்தால் உடனே கைது செய்து அவர்களின் சொத்துக்கள் பறிக்கப்படுகின்றன.. ஆந்திர அரசை தாக்கிய சந்திரபாபு நாயுடு

 
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

யாராவது பேச வாயை திறந்தால் உடனே கைது செய்து அவர்களின் சொத்துக்கள் பறிக்கப்படுகின்றன என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசை தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.

ஆந்திர பிரதேசத்தில் மேலவையில் உள்ள பட்டதாரி தொகுதிகளுக்கு நடைபெற்ற மூன்று தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது. இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கூறியதாவது: இது மக்களின் வெற்றி. தெலுங்கு தேச கட்சியின் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தன் மூலம் பொதுமக்கள் தெலுங்கு தேசம் கட்சியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

தெலுங்கு தேசம்

தெலுங்கு தேசம் கட்சியின் வெற்றி ஆந்திராவின் எதிர்காலம். இந்த தேர்தல் முடிவுகள் ஒரு அரசு ஊழியர், விவசாயி, பிற்படுத்தப்பட்டோர், சாமானியர்கள் மற்றும் விலைவாசி உயர்வால் அதிக சுமையால் பாதிக்கப்பட்ட மாணவர்களின்  வேதனையை பிரதிபலிக்கிறது. ஒரு அராஜக ஆட்சியின் கீழ் பயத்தில் வாழும் ஒரு சராசரி மனிதனின் வேதனை இந்த தேர்தல் முடிவுகளில் முழுமையாக பிரதிபலித்தது.  முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பணபலத்திலும், அட்டூழியங்களிலும் எப்போதும் நம்பிக்கை கொண்டவர்

ஜெகன் மோகன் ரெட்டி

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த நான்கு ஆண்டுகளிலும் நடந்த அனைத்து தேர்தல்களையும்  தேர்வுகளாக மட்டுமே மாற்றினார். ஒய்.எஸ்.ஆர்.சி.பி. விரைவில் மறைந்து விடும். ஆந்திராவுக்கு முதல்வர் ஏற்படுத்திய அழிவு மற்றும் பெரிய அளவிலான ஊழல் அவருக்கு நிச்சயமாக பாடம் கற்பிக்கும். ஒய்.எஸ்.ஆர்.சி.பி. மீண்டும் ஆட்சிக்கு வராது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் மூத்த ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கூட குற்றவாளிகளுடன் கைகோர்த்து இருக்கின்றனர். யாராவது பேச வாயை திறந்தால் உடனே கைது செய்து அவர்களின் சொத்துக்கள் பறிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.