தேர்தலில் வென்ற எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு பரபரப்பு ஆலோசனை

 
ட்ட்

மக்களவை தேர்தலில் வென்ற எம்.பி.க்களுடன் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை மேற்கொண்டார். 25 தொகுதிகளைக் கொண்ட ஆந்திராவில் 16 தொகுதிகளை தெலுங்கு தேசம் கட்சி கைப்பற்றியுள்ளது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைவதில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது.

Image

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை தேர்தலில் வெற்றி பெற்ற அக்கட்சி எம்.பி.க்கள் சந்தித்தனர். குண்டூரில் மாவட்டம்  உண்டவல்லியில் உள்ள சந்திரபாபு இல்லத்தில்  நடந்த  கூட்டத்தில் பல எம்.பிக்கள் பங்கேற்றனர். நேரில் வரமுடியாத  எம்.பி.க்கள் ஜூம் கால் மூலம்  பங்கேற்றனர். இந்த கூட்டத்தில்ப் சந்திரபாபு நாயுடு முதலில் அனைத்து எம்.பி.க்களுக்கும் வாழ்த்து தெரிவித்து ஆலோசனைகளை வழங்கினார். 

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சி அனைத்து எம்.பி.க்களும் நாளை டெல்லியில்  நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதற்காக அந்தந்த  தொகுதிகளில் உள்ள எம்.பி.க்கள் இன்று இரவே டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளனர்.