திருமலைக்கு வரவிருந்த ஜெகன் மோகன் ரெட்டியை யாரும் தடுக்கவில்லை- சந்திரபாபு நாயுடு

 
chandrababu jagan

ஏழுமலையான் கோயில் நிபந்தனையின்படி நம்பிக்கை உறுதிமொழி அளிக்கும்படி தேவஸ்தான அதிகாரிகள் கூறினார்கள், ஆனால் ஜெகன்மோகன் எதற்காக திருப்பதி கோயிலுக்கு செல்லவில்லை என தெரியவில்லை என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Chandrababu Naidu vs Jagan Reddy Over Cancelled Tirupati Temple Visit


ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, “எந்த கோயிலாக இருந்தாலும் அந்த மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும். ஜெகனை யாரும் திருமலைக்கு போக வேண்டாம் என்று சொல்லவில்லை.  திருமலைக்கு போகாததற்கு ஜெகன் மோகன்  ஏதோ ஒரு சாக்கு சொல்லுகிறார். ஒவ்வொரு கோயிலுக்கும், மதத்திற்கு ஒரு சம்பிரதாயம், கலாச்சாரம் உள்ளது. எனவே அந்த கடவுளின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும்.  கடவுள் மற்றும் சடங்குகளை விட யாரும் பெரியவர்கள் இல்லை. ஏழுமலையான் கோயில்  நமக்கு கிடைத்திருப்பது தெலுங்கு மக்களின் அதிர்ஷ்டம். இதற்கு முன்பு முதல்வராக நான் சென்றேன், இப்போது  ஏன் போகக்கூடாது என்று கூறுகிறார். இதற்கு முன்பு  ஜெகன் மோகன் விதிகளை மீறி திருமலைக்குச் சென்றார். இதற்கு  முன்பு  பலர் நம்பிக்கை உறுதி  கொடுத்துவிட்டு  சென்றனர்.

இந்து மதத்தை மதிக்கும் திருமலையில் உள்ள விதிகளை ஏன் ஜெகன் பின்பற்றுவதில்லை? லட்டு கலப்படம் செய்யவில்லை என கூறுகிறார். நெய்யில் கலப்படம் செய்யப்பட்டது ஆய்வக அறிக்கையில் தெளிவாக உள்ளது. இருப்பினும் முழு விசாரணை செய்வதற்காக ஐ.ஜி. தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக ஒரு சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இதில் எந்த வழிப்பாட்டு தளமாக இருந்தாலும் மசூதியாக இருந்தாலும் சர்ச், கோயில் இருந்தாலும் அந்தந்த வழிபாட்டுத் தலங்களில் அந்த மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இனி பதவியில் இருக்க வேண்டும். அந்த மதத்தை கலாச்சாரத்தை கடைபிடிக்க வேண்டும் என சட்டம் கொண்டுவரப்படும்” என்றார்.