மோடிக்காக பதவியேற்பை தள்ளிவைத்த சந்திரபாபு நாயுடு
Jun 6, 2024, 10:00 IST1717648223557

என்.டி.ஏ கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யவுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மோடி மீண்டும் ஆட்சியமைக்க சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து வரும் ஜூன் 8-ல் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடிக்காக தனது பதவியேற்பு விழாவை ஜூன் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு. ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு ஜூன் 8ல் பதவியேற்கவிருந்த நிலையில், பிரதமர் மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக தேதியை மாற்றியுள்ளார்.