சந்திரபாபு நாயுடு கைது - 144 தடை உத்தரவு

 
144

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

tn

நந்தியாலாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சந்திரபாபு நாயுடு ஆர்.கே. நகரில் உள்ள விழா அரங்கில் தங்கி இருந்தபோது நிதி மோசடி தொடர்பான வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர்.  வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது எவ்வாறு கைது செய்வீர்கள் என்று சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பிய   நிலையில்,  வழக்கு பதிவுகள் மற்றும் எஃப் ஐ ஆர் நகல்களை காண்பிக்க வேண்டும் என்றும்  முறையிடப்பட்டது.  ரிமாண்ட் ரிப்போர்ட்டை கொடுக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களை கைது செய்த போலீசார் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்ற நிலையில்,  சந்திரபாபு நாயுடுவையும் கைது செய்து விஜயவாடாவுக்கு அழைத்து  சென்றனர்.  இதனால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆந்திரவில்  உள்ள 7 மண்டலங்களில் வரும் 15ம் தேதி சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விஜயவாடாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்திற்கு சந்திரபாபு நாயுடு அழைத்துச் செல்லப்படுவதால் அங்கு பெருமளவு தொண்டர்கள் குவிந்துள்ளனர்.