கேரளாவில் அதி கனமழைக்கு வாய்ப்பு

 
rain

கேரளாவின் பல்வேறு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பயணத்தை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

rain

 கேரளாவில் கடந்த மாதம் இறுதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.  மேற்கு பசுபிக் பெருங்கடலில் உருவான புயல் வலுப்பெற்றுதன் காரணமாக கேரள மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது . கனமழை இன்று வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் தெரிவித்து இருந்தது.  அதன்படி கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Rain

இந்நிலையில் எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், மூணாறு, பத்தனம்திட்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதி கனமழையால் ஜூன் 28 வரை மூணாறு, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார்.