125 பேரை கொன்ற சம்பல் கொள்ளைக்காரன் உண்ணாவிரதம்

 
b

பிரபல சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரன் பஞ்சம் சிங் சவுகான் . சரண் அடைந்து காந்திய வழியில் வாழும் அவர் தற்போது உண்ணாவிரதம் இருந்து அறப்போராட்டம் நடத்தி வருகிறார்.   தனது கட்டிடத்தை புல்டோசர் கொண்டு இடிக்கும் மத்திய பிரதேச அரசியல் எதிர்த்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்.

 உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநில எல்லைகளில் அமைந்த பகுதி தான் சம்பல் பள்ளத்தாக்கு.  இந்த பகுதியில் ஒரு காலத்தில் பல கொள்ளைக்காரர்கள் இருந்து கோலோச்சு கொண்டிருந்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர் பஞ்சம் சிங் சவுகான். 

pc

 1960 ஆம் ஆண்டுகளில் மூன்று மாநில காவல் துறைக்கும் சவாலாக இருந்தவர் பஞ்சம் சிங் சவுகான்.  125 பேர்  வரைக்கும் இவர் கொலை செய்திருக்கிறார்.  500 கொள்ளையர்களுக்கு தலைவனாக இருந்திருக்கிறார். 

  மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் 1972 ஆம் ஆண்டில் மத்திய பிரதேச அரசிடம் சரணடைந்திருக்கிறார் பஞ்சம் சிங்.   தன்னை தூக்கிலிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் சரணடைந்து ஆயில் தண்டனை பெற்றவர்,  1980 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார் .  அதன் பின்னர் காந்திய வழியில் வாழ்ந்து வருகிறார் ஆன்மீக பணியிலும் தீவிரமாக இருந்து வருகிறார் .

அவருக்கு தற்போது 100 வயது ஆகிறது.   பிங்க் மாவட்டத்தின் லகார் என்னும் இடத்தில் வசித்து வருகிறார் .  தனது சொத்துக்களில் ஒரு வீட்டை ஆன்மீக அமைப்பிற்கு நன்கொடையாக கொடுத்து இருக்கிறார்.  பஞ்சம் சிங் நன்கொடையாக அளித்த வீடு சட்டவிரோதமானது என்று அதை புல்டோசரால் இடித்துத் தள்ள நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது . இதனால் அதிர்ச்சி அடைந்த பஞ்சாப் அரசின் நடவடிக்கை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருக்கிறார். பஞ்சம் சிங் சவுகான்.  அந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 50 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.