சாலையில் சென்ற பெண் -பைக்கில் வந்த வாலிபர்கள் -தடுப்பூசி போட்டதும் நடந்த கொடுமை.

 

சாலையில் சென்ற பெண் -பைக்கில் வந்த வாலிபர்கள் -தடுப்பூசி போட்டதும் நடந்த கொடுமை.

தடுப்பூசி போட்டுகொண்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த 85 கிராம் தங்க செயினை அறுத்துக்கொண்டு ஓடிய திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்

சாலையில் சென்ற பெண் -பைக்கில் வந்த வாலிபர்கள் -தடுப்பூசி போட்டதும் நடந்த கொடுமை.


கர்நாடக மாநிலம் மைசூரு அருகேயுள்ள என்.ஆர்.மொகல்லா பகுதியில் வசிக்கும் ரூபா என்ற பெண் தன்னுடைய கணவரோடு தடுப்பூசி போட்டு கொள்ள முடிவெடுத்தார் .அதன் படி அவர்கள் அந்த மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருக்கும் வேலையில் இந்த கொரானா தடுப்பூசி போட்டுக்கொள்ள அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நடந்தே சென்றார்கள் .
நேற்று காலையில் ரூபாவும் அவரின் கணவரும் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்றார்கள் .அங்கு இருவரும் தடுப்பூசி போட்டு கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தனர் .அப்போது அந்த ரூபாவின் கழுத்தில் 85 கிராம் உள்ள தங்க சங்கிலி மின்னுவதை அந்த பகுதியில் உள்ள செயின் திருடர்களுக்கு தெரிய வந்தது .அதனால் அவர்கள் அந்த பெண்ணை வீட்டிலிருந்தே நோட்டமிட்டு வந்துள்ளார்கள் .
மேலும் அங்கு ஊரடங்கு இருப்பதால் பொது மக்கள் யாரும் வெளியே வரவில்லை .மேலும் சாலையில் ஒருவரும் இல்லை .இது அந்த செயின் திருடர்களுக்கு வசதியாக போனது .அதனால் அவர்கள் அந்த பெண் நடந்து வந்தபோது ஒரு மறைவான இடத்தில் நின்று கொண்டு,அவரின் கழுத்திலிருந்த 85 கிராம் தங்க நகையை அறுத்து கொண்டு ஓடி விட்டார்கள் .
அதை பார்த்து அதிச்சியடைந்த அந்த ரூபா, அந்த நடுரோட்டில் கத்தி கூச்சல் போட்டார் .பிறகு அவரின் கணவரும் அந்த திருடர்களை கொஞ்ச தூரம் விரட்டி சென்றார் .ஆனால் அவர்களால் அந்த கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை .அதனால் அவர்கள் அங்குள்ள என்.ஆர்.மொகல்லா காவல் நிலையத்தில் புகார் கூறினார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியின் சிசிடிவி கேமெரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்

சாலையில் சென்ற பெண் -பைக்கில் வந்த வாலிபர்கள் -தடுப்பூசி போட்டதும் நடந்த கொடுமை.