“தன்பாலின திருமணம் அடிப்படை உரிமையில் சேராது; அங்கீகரிக்க கூடாது” – மத்திய அரசு பரபரப்பு கருத்து

“தன்பாலின திருமணம் அடிப்படை உரிமையில் சேராது; அங்கீகரிக்க கூடாது” – மத்திய அரசு பரபரப்பு கருத்து

தன்பாலின திருமணத்தைச் சட்டப்பூர்வமானதாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்து திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு இன்று பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.

“தன்பாலின திருமணம் அடிப்படை உரிமையில் சேராது; அங்கீகரிக்க கூடாது” – மத்திய அரசு பரபரப்பு கருத்து

அதில், “தன்பாலின உறவு என்பது சட்ட விரோதமானது என்று கூறும் சட்டப்பிரிவு 377 நீக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு தன்பாலின திருமணத்தை அடிப்படை உரிமையாக யாரும் கோர முடியாது. ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழ்வதும், அவர்கள் உறவில் இருப்பதும் இந்தியக் குடும்ப கலாச்சாரத்தின்படி ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. இந்தியக் குடும்ப முறையில் கணவர் என்பவர் ஆணாகவும் மனைவி என்பவர் பெண்ணாகவும் இருக்க வேண்டும்.

“தன்பாலின திருமணம் அடிப்படை உரிமையில் சேராது; அங்கீகரிக்க கூடாது” – மத்திய அரசு பரபரப்பு கருத்து

திருமணம் என்பது இரண்டு தனிப்பட்ட நபர்களை சமூகம் அங்கீகரிக்கும் நிகழ்வாகும். தற்போதுள்ள சட்டத்தின்படி ஒரு பாலினத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்கும் எந்தவொரு சட்டமும் இதுவரை இங்கு உருவாக்கப்படவில்லை. எனவே, தன்பாலின திருமணத்தை நீதிமன்றத்தால் அங்கீகரிக்க முடியாது. ஒருவருக்கு அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் சட்டப்பிரிவு 21இன் படி தன்பாலின திருமணத்தைக் கொண்டு வர முடியாது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.