ஆப்கானிஸ்தானில் இந்திய விமானம் விபத்துக்குள்ளானதா? - மத்திய அரசு மறுப்பு

 
flight

இந்தியாவில் இருந்து மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பதக்‌ஷான் மாகாணத்தில் மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியான நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து மாஸ்கோ நோக்கி சென்ற இந்தியாவை சேர்ந்த பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பதக்‌ஷான் மாகாணத்தில் மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது. விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் பயணித்தனர் அவர்களின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.  விபத்துக்குள்ளானது மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறிய ரக விமானம் என குறிப்பிடப்பட்டுள்ளது.