#Breaking கோதுமை ஏற்றுமதியை தடை செய்து மத்திய அரசு உத்தரவு!!

 
tn

கோதுமை ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்து  உத்தரவிட்டுள்ளது. 

tn

இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தை சந்தித்துள்ள நிலையில் கோதுமை மாவு விலையும்  மிகக் கடுமையாக உயர்ந்தது.  கடந்த மாதம் கோதுமை விலை கிலோவுக்கு 32.38 ரூபாயாக உயர்ந்தது.  இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக விலை உயர்வாகும்.  2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோதுமை விலை உயர்ந்தது.  அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் கோதுமை விலை உயர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 கோதுமை உற்பத்தி சரிந்து கையிருப்பு கணிசமாக குறைந்ததால் விலை உயர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  பிப்ரவரி , மார்ச் மாதங்களில் உக்ரைனில் ரஷ்ய போர் நடந்தால் சர்வதேச சந்தையில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.  இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள இந்தியாவிலிருந்து மார்ச் மாதத்தில் மட்டும் 70 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை ஏற்றுமதி செய்யப்பட்டது.  இதனால் கோதுமை மாவின்  சராசரி விலை மாற்று மதத்தில் 32.03 ரூபாயிலிருந்து ஏப்ரல் மாதத்தில் 32.38 ரூபாயாக உயர்ந்தது . கோதுமை விலை உயர்ந்து உணவு விலை மற்றும் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நடப்பு நிதி ஆண்டில் 100 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை வீதம் கையிருப்பில் உள்ளது.

tn

இந்நிலையில் கோதுமை ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்து  உத்தரவிட்டுள்ளது.  பிற நாடுகளின் கோரிக்கைக்கு ஏற்ப அங்கு கோதுமை தேவை இருப்பின் மட்டுமே அரசின் அனுமதியோடு ஏற்றுமதி செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோதுமை விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தலாம்.