குரங்கம்மை தடுப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு!!

 
tn

குரங்கம்மை தொற்றை தடுக்கும் வகையில் மத்திய அரசு தடுப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

tn

ஒட்டுமொத்த உலகத்தையும் கொரானா வைரஸ் தொற்று ஆட்டி படைத்த நிலையில் தற்போது குரங்கம்மை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்தியா,  ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவருக்கு குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது.  இதனால் குரங்கம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கேரளா , டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் குரங்கம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . கேரளாவில் மட்டும் சுமார் நான்கு பேருக்கு குரங்கம்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இதில் அண்மையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இதன் காரணமாக கர்நாடகாவில்  குரங்கம்மை நோய் பரவலை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு அறிவித்தது.

central

இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை போலவே குரங்கம்மை தடுப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு . குரங்கம்மை பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், குரங்கம்மை அறிகுறி தெரிந்தால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது, குரங்கம்மை பாதிக்கப்பட்ட நபரை முதலில் தனிமை படுத்த வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.