பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு

 
passport

சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜூலை 1 முதல் 36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1500 லிருந்து ரூ.2500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 60 பக்கங்கள் கொண்ட  பாஸ்போர்ட்டின் கட்டணம் ரூ. 2,000 லிருந்து ரூ.3,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைக்கான `தட்கல்'  பாஸ்போர்ட் கட்டணம் ரூ.3,500லிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 60 பக்கங்கள் கொண்ட `தட்கல்' பாஸ்போர்ட் கட்டணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்டண உயர்வும் ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு பாஸ்போர்ட் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.