பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!

 
central cabinet central cabinet

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ள சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. 

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தின் போது இந்திய விமானங்களை தாக்க வந்த பாகிஸ்தான் போர் விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. தீவிரவாத முகாம்களை நோக்கி இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ள சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ள சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.